உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பறவை காய்ச்சல் அச்சத்தால் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் சுற்றித்திரிந்த புள்ளி மானை உற்சாகத்துடன் தொட்டு பார்த்து குதூகலித்த பொதுமக்கள்.

29-11-2026 | 06:48


மேலும் இன்றைய போட்டோ

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைக்க சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தாமதமாக வந்ததால் வெயிலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் சோர்ந்து மயங்கி காணப்பட்டனர்.

29-11-2026 | 06:37


ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், வேர்க்கடலை வரத்து அதிகரித்துள்ளது. சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள வேர்க்கடலைகளை தரம் பிரித்த தொழிலாளர்கள்.

29-11-2026 | 06:31


செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29-11-2026 | 00:38


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபத்தை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இளைஞரணி தலைவர் ஷியாம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

28-11-2026 | 23:16


புதுச்சேரியில் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி மேரி கட்டிடம் சிவப்பு மின் விளக்கினால் ஜொலிக்கிறது

28-11-2026 | 22:40


ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

28-11-2026 | 22:22


வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் அச்சம் நீங்கியதை அடுத்து, நீர் வாழ் பறவைகளின் பகுதிகள் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன

28-11-2026 | 21:45


இளையான்குடி வாரச்சந்தையில் எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆய்வு செய்தனர்.

28-11-2026 | 21:45


சிவகங்கை வாரச்சந்தை அருகே உள்ள போலிஸ் குடியிருப்பு முன்பகுதி கட்டிடம் சேதமடைந்துள்ளது.

28-11-2026 | 19:55