உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தென்மாவட்டங்களில் பிப்., 28 முதல் கனமழைக்கு வாய்ப்பு | rain alert | TN

தென்மாவட்டங்களில் பிப்., 28 முதல் கனமழைக்கு வாய்ப்பு | rain alert | TN

தென்மாவட்டங்களில் பிப்., 28 முதல் கனமழைக்கு வாய்ப்பு | rain alert | TN வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பிப்ரவரி 28 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் நாளை ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 28ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 1ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை