45 ரன்கள் வித்தியாசத்தில் S.N.M.V. கல்லுாரி அணி வெற்றி | Cricket Match
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. நாக் அவுட் முறையில் எஸ்.என்.எம்.வி. மற்றும் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்ற எஸ்.என்.எம்.வி. அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அணியின் பிரேம்குமார் 56 ரன்கள் மற்றும் கவுதம் 50 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய என்.ஜி.பி. அணியின் ரேவந்த் 48 ரன்கள் மட்டுமே எடுத்து போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதையடுத்து என்.ஜி.பி. அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ்.என்.எம்.வி. அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.