ஏழைகளை வாழ்க்கையில் உயர்த்தும் உதவிக்கரம் | Coimbatore
கோவையில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, அரசு பள்ளியில் படித்து உயர் படிப்புக்காக தனியார் கல்லுாரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அடுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்தான பெண்கள் விரும்பும் தொழில்களை செய்யவும் அறக்கட்டனை சார்பில் உதவி செய்யப்படுகிறது. மூன்றாவதாக மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, வீடுகளுக்கு கழிப்பிட வசதி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. மற்றவர்களிடமிருந்து நிதி உதவி பெற்று கல்வி, பெண்கள், மலைவாழ் மக்கள் ஆகியோரை வாழ்க்கையில் உயர உதவிக்கரம் நீட்டும் அறக்கட்டளை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.