உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீட் தேர்வில் சாதித்தவர்களுக்கு பாராட்டு... | Felicitation ceremony for NEET achievers | covai

நீட் தேர்வில் சாதித்தவர்களுக்கு பாராட்டு... | Felicitation ceremony for NEET achievers | covai

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களான தூய்மை பணியாளர் மகள் தாரணி, கூலித்தொழிலாளி மகன் மிதிலன் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் மகன் தருனேஷ் ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளியில் முதல் முறையாக ஒரே பள்ளியை சேர்ந்த மூவர் டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜ் தலைமை வகித்து பேசுகையில், கடும் முயற்சியினால் வெற்றிப்பெற்ற இந்த மாணவர்கள், மக்கள் சேவையே மகேசன் சேவை என அனைவருக்கும் பயன்படும் வகையில் சேவை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !