உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று... மருத்துவர் சொல்லும் ஆலோசனை...

அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று... மருத்துவர் சொல்லும் ஆலோசனை...

தமிழகத்தில், சில மாவட்டங்களில்,ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பரவல் உள்ளது. காடுகளில் வேலை செய்பவர்களை கால்நடைகளின் உடலில் வளரும் உண்ணிகள் அல்லது மண்ணில் உள்ள உண்ணிகள் கடிப்பதன் வாயிலாக இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால், காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது சொரி ஏற்படும். அதைத் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், எளிதாக மாத்திரைகள் வாயிலாகவே குணப்படுத்த முடியும். சரியாக கவனிக்காவிட்டால், உடலின் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஸ்க்ரப் டைபஸ் கண்டறிவது எப்படி? வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !