/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ மாவட்ட நிர்வாகம் சுத்தம் செய்ய வலியுறுத்தல் | Tharmapuri | Polluted Hogenakkal
மாவட்ட நிர்வாகம் சுத்தம் செய்ய வலியுறுத்தல் | Tharmapuri | Polluted Hogenakkal
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருகின்றனர். தர்ப்பணம் முடித்து விட்டு தாங்கள் அணிந்த துணிகளை காவிரி ஆற்றில் விட்டுச் செல்கின்றனர். துணிகள் காவிரி ஆற்றில் கரையோரங்கள், உட்புறங்கள் மற்றும் செடிகளில் சிக்கி மண்டிக் கிடக்கின்றன. ஆற்றில் நீர் வரத்து குறையும் போது துணிகள் துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீர் மாசடைகிறது. குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆற்றுப் பகுதிகளில் மண்டிக்கிடக்கும் துணிகளை அகற்றவும், தர்ப்பணம் கொடுப்போரின் துணிகளை உடனுக்குடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிப் 02, 2024