உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்களே சாலை அமைத்தனர்

அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்களே சாலை அமைத்தனர்

அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்களே சாலை அமைத்தனர் | public people making roads on their own land | dharmapuri தர்மபுரி மாவட்டம் கிழக்கு கல்லிபுரம் பகுதியில் சுடுகாட்டிற்கு முறையான சாலை வசதிகள் இல்லை. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இறப்புகள் ஏற்பட்டால் இரண்டு கி.மீ தூரம் விவசாய நிலங்களின் வழியாக சடலங்களை சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் பயிரிடப்பட்ட நெல் , ராகி போன்றவை சேதமடைகின்றன. மழைகாலங்களில் இது இன்னும் சவாலான ஒன்றாகும். மூன்று தலைமுறைகளாக கலெக்டர் முதல் தொடங்கி CM செல் வரை பல மனுக்கள் கொடுத்து முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். எதுவும் பயன்தராத நிலையில் கிராம மக்கள் சேர்ந்து விவசாயிகளிடம் இருந்து சாலை அமைக்க நிலத்தை வாங்கி உள்ளனர். ஒவ்வொரு வீடாக சென்று பணம் வசூலித்து ஜேசிபி வைத்து சுடுகாட்டிற்கு மண் சாலை அமைத்து உள்ளனர். விவசாய நிலங்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , தார் சாலை, மின் மயானம், தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு விரைந்து செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி