கொடைக்கானல் மலையில் யார் அந்த மனிதன்? | Strange Man
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊத்து - வில்பட்டி சாலைகளில் பழுதான ஜீப் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக விசித்திர மனிதன் ஒருவர் வசித்து வருகிறார். மழை, கடும் பனி, வெயில், புயல் என எதற்கும் அந்த மனிதன் அஞ்சுவதாக தெரியவில்லை. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது குறித்து விசாரிக்கையில் ஸ்வாரசியமான தகவல் கிடைத்தது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அவர் பெயர் ஹெரால்டு. வயது 80. சோசியல் சைக்காலஜி படித்ததாக கூறும் இவர் இந்து மதத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். இதன் விளைவாக இந்து மதம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ஸ்வீடன் நாட்டு அனுமதியுடன் கடந்த 1990ம் ஆண்டு இந்தியா வந்தார். இமயம் முதல் குமரி வரை பல ஆண்டுகள் சிவப் பயணம் மேற்கொண்டார். இதன் பயனாய் சிவன் என்னை அழைத்தார் நான் இங்கு வந்தேன் என அப்போது அடிக்கடி கூறி வந்தார்.