உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சி மெகா ஊழல் | Heavy Rains |Motorists are suffering as they drift in the skies|Madurai

மதுரை மாநகராட்சி மெகா ஊழல் | Heavy Rains |Motorists are suffering as they drift in the skies|Madurai

மதுரை மாநகராட்சி மெகா ஊழல் | Heavy Rains | Motorists are suffering as they drift in the skies | Madurai மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரியார் பஸ் ஸ்டாண்ட், பாண்டி பஜார், ரயில்வே ஜங்ஷன், வெளிவீதிகள், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி தெப்பக்காடானது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றனர். பாண்டி பஜார் வெள்ளக்காடாக மாறியதால் கடைகளுக்குள் மழைநீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்தன. ரயில்வே ஜங்ஷன் முன்பாக முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் பயணிகள் வருகை மற்றும் நடமாட்டத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து டூவிலரில் செல்லும் பொதுமக்கள், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல கடும் சிரமத்தை சந்தித்தனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் 2 ஆயிரத்து 191 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக ஒரு சொட்டு மழை நீர் கூட வெளியேறவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்கள் தரமற்றதாகவும், முறையாக அமைக்காததால் மக்கள் வரிப்பணம் ஊழல் பெருச்சாளிகள் கைக்கு கைமாறிது. அதேபோல் மத்திய அரசின் அமுருத் திட்டத்தின் கீழ் 471 கோடி ரூபாய் மதிப்பில் நிலத்தடி கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியும் முறையாகவும், தரமாகவும் நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டங்கள் முழுவதும் ஊழல் செய்வதற்காகவே கொண்டு வரப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். இதனால் சிறு மழைக்கும் கூட மதுரை தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஆண்டாண்டு காலமாக நீடித்து வருவது வேதனைக்குரியது.

மே 07, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
மே 13, 2026 08:55

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கார்பகநகர் பகுதியில், குறிப்பாக அருமுகம் மிடில் தெருக்கள் சமீபத்தில் நகராட்சி சார்பில் சாலை அமைப்பு, கழிவுநீர் கால்வாய், மணல் நடைபாதை மற்றும் பாவர் பிளாக் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்த பின்னரும் பல இடங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக கடைகளுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்: வணிக நிறுவனங்களுக்கு கடுமையான வர்த்தக பாதிப்பு ஏற்படுகிறது பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது சுகாதார மற்றும் கொசு பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது மேலும், சில இடங்களில்: கால்வாய் மூடுகள் சரியாக பொருத்தப்படவில்லை சாலை மட்டங்கள் சமமின்றி காணப்படுகின்றன நீர் வடிகால் சரியான சரிவு slope இன்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது நடைபாதை மற்றும் கடை அணுகும் பகுதிகள் சேதமடைந்துள்ளன நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பொதுமக்களுக்கு நன்மை தருவதற்குப் பதிலாக தற்போது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. நாங்கள் இப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களாக சொத்து வரி Property Tax, தொழில் வரி Professional / Thozhil Vari, வணிக வரி மற்றும் பிற நகராட்சி கட்டணங்களை முறையாக செலுத்தி வருகின்றோம். இருப்பினும், அடிப்படை வசதிகள் தரமற்ற நிலையில் இருப்பது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தாங்கள் தயவு செய்து: 1. கார்பகநகர் மற்றும் அருமுகம் மிடில் தெருக்கள் பகுதிகளில் உடனடி நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 2. மழைநீர் தேக்கம் ஏற்படும் பகுதிகளை சரிசெய்ய தொழில்நுட்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 3. கடைகள் மற்றும் வீடுகளுக்கான அணுகுமுறைகளை பாதுகாப்பாக மீள அமைக்க வேண்டும். 4. கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். 5. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் வணிகத்தையும் பாதுகாக்க தங்களின் உடனடி நடவடிக்கையை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !