உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டின் அடையாளத்தை சீர்குலைப்பது உரிமையா?: பாஜ கடும் கண்டனம் India AI Summit |Congress Protest

நாட்டின் அடையாளத்தை சீர்குலைப்பது உரிமையா?: பாஜ கடும் கண்டனம் India AI Summit |Congress Protest

டில்லியில் 5 நாட்கள் நடைபெற்ற சர்வதேச AI உச்சிமாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், வல்லுநர்கள் கலந்துகொண்டனர். இன்று, இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலர் மாநாட்டு அரங்கிற்குள் புகுந்து, தாங்கள் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்றிவிட்டு பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க ஒப்ந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பிரத் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். காங்கிரசாரின் இந்த செயலுக்கு பாஜ தேசிய தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு மதிப்புமிக்க சர்வதேச ஏஐ மாநாட்டை நடத்துகிறது. இந்தியா தனது புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில் நுட்பத்தில் தனது தலைமையையும் உலகுக்கு எடுத்துச்சொல்லும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கண்ணியம் இழந்து இடையூறுகள் செய்திருக்கிறது. ராகுலின் தொண்டர்கள், ஆடையின்றி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது உலக அரங்கில் நமது நாட்டை அவமானப்படுத்தும் செயலாகும். ஏஐ தொழில்நுட்பத்தில் உலகளாவிய சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை