சில்மிஷ வாலிபர் எஸ்கேப்: சிக்கிய டிரைவர், கண்டக்டர் bus driver conductor thrashed salem bus stand sc
சேலத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, நேற்று மாலை சேலம் மத்திய சிறைச்சாலை பஸ் ஸடாப்பில் இருந்து சேலம் பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பயந்துபோன அந்த மாணவி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் புகார் செய்தார். ஆனால், அந்த வாலிபரை அவர்கள் கண்டிக்கவில்லை. மாணவியால் பிரச்னை வந்துவிடும் என நினைத்த அந்த சில்மிஷ வாலிபர் நைசாக அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஓடி விட்டார். மாணவி, பஸ்சில் இருந்தபடியே தன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் போன் செய்தார். பஸ்சில் வாலிபர் தொந்தரவு செய்ததையும், அதுபற்றி தான் புகார் கூறியும் கண்டக்டரும், டிரைவரும் அலட்சியமாக பேசினர் எனவும் போன் போட்டு மாணவி சொன்னார். அதைக் கேட்டதும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொந்தளித்தனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்து வந்தனர். மாணவி பயணித்த டவுன் பஸ், சேலம் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்த மறுகணமே அங்கு பூகம்பம் வெடித்தது. பஸ்சுக்குள் ஏறிய மாணவியின் ஒரு இளைஞர், கண்டக்டர் டிரைவரை சரமாரி தாக்கினார். எட்டி உதைத்தார். கண்டக்டரும், டிரைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கியபோது அங்கே மாணவியின் பெற்றோர் உட்பட மொத்த குடும்பமும் நின்றிருந்தது. கண்டக்டர், டிரைவருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பொண்ணு பிரச்னைனு சொன்னா என்ன ஏதுனு கேக்க மாட்டியா? பஸ்ல பயணிகளின் பாதுகாப்புக்கு நீங்கதானே பொறுப்பு... நீங்களே இப்படி அலட்சியமா பேசலாமா? என கேட்டு கடுமையாக திட்டி தாக்கினர். திடீர் தாக்குதலால் கண்டக்டரும், டிரைவரும் நிலை குலைந்து போனார்கள். பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் தடுக்க வந்தும் பலனில்லை. உடனே ஒரு கண்டக்டர் போலீசுக்கு போன் செய்தார். ஆனால், போலீசார் சண்டை முடிந்த பிறகே பொறுமையாக வந்தனர். படுகாயமடைந்த டிரைவர் தனபால் மற்றும் கண்டக்டர் திருமுருகன் ஆகியோரை போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். கண்டக்டர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் மாணவியின் பெற்றோர் ஆறுமுகம் - ப்ரீத்தி மற்றும் உறவினர்கள் என 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தந்தை ஆறுமுகம் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுக்கு பயந்து மாணவியின் தாய் பிரீத்தி தன்னை டிரைவரும் கண்டக்டரும் தாக்கியதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, அவரையும் போலீசார் கைது செய்தனர். கண்டக்டர், டிரைவரை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்களை தாக்கிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோர் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலேயே பஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஆபத்துக்கு போன் போட்டால்கூட போலீசார் வருவதில்லை என கண்டக்டர்கள், டிரைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். #BusDriver #Conductor #Thrashed #Salem #BusStand #SchoolGirl #Student #TownBus #ManHarassment #Police #Crime #EveTeasing #SafetyFirst #ProtectStudents #HarassmentAwareness #PublicTransport #WomenSafety #EndEveTeasing #StopHarassment #CommunityJustice