உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: ரெட்ட தல

பாவம்... பரிதாபம்... அருண் விஜய்!'நீ பணக்காரனா இருந்தாத்தான் உன்கூட வாழ வருவேன்' என காளியின் காதலி சொல்ல, அந்நேரம் பார்த்து தன்னைப் போலவே தோற்றமுள்ள பணக்காரனான உபேந்திராவுடன் காளிக்கு அறிமுகம் கிடைக்க, 'உபே'வை தீர்த்துக்கட்டி அவன் சொத்தை காளி ஆட்டையப் போட, 'உபே'வின் பகையாளிகள் காளியை சுத்துப்போட, 'எனக்கு நீ வேண்டாம்; உன் பணம் தான் வேணும்' என காதலி ஓட்டம் பிடிக்க, 'நான் யார் தெரியுமா' என காளி 'ப்ளாஷ் பேக்' சொல்ல... ஆத்தி... உசுரு பத்திரம்யா... ஓடிரு! தன் பாத்திரத்தை இயக்குனர் விவரிக்கையில், 'இரட்டை வேடம்; அதிலும், ஏகப்பட்ட கெட்டப்' என அருண் விஜய்க்கு இக்கதை மீது பெரும் நம்பிக்கை தோன்றியிருக்கலாம். ஆனால், அந்த இரண்டு மட்டுமே மொத்த படத்திலும் இருக்கப் போகிறது என்பதை அனுபவசாலியான அவர் கணிக்கத் தவறியிருக்கிறார். 'கேங்ஸ்டர்' வகை ஆங்கில படங்களின் ஸ்டைலில் ஆடை வடிவமைப்பில் கவனம் செலுத்தியிருந்தாலும், இல்லாத ஊருக்கு வழிசொல்வதாகவே அது இருக்கிறது. ஜான் விஜயின் வசன பாவங்கள் ரசிகர்களை எரிச்சல் கொள்ள வைக்கின்றன. இந்த பாவத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு வாங்கி இருக்கிறார் நாயகி சித்தி இத்னானி. உபேந்திரா இடத்தில் ஆள்மாறாட்டம் செய்திருக்கும் காளியிடம், 'இப்ப நீங்க 14 நாள் பரோல்ல வந்திருக்கீங்க; உங்க பணம் அந்த கார்ல இருக்கு' என வருவோர் போவோர் எல்லாம் 'பரம ரகசியம்' பகிர்கின்றனர். இப்படியான நிறைய ' இன் டெலிஜென்ட்' காட்சிகளை நாம் காணத்தந் திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் திருக் குமரன். ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமா அனுபவிக்கும் கடைசி சாபம். ஆக...'தக்காளி அவன...' என்று சீற வைக்கும் வெறித்தனமான படைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !