'உங்களை 'சிஸ்டர்னு கூப்பிடுறதுக்கு பதிலா 'அம்மா'ன்னு கூப்பிடவா; முதல் பத்திரிகை உங்களுக்குத் தான்... கண்டிப்பாக வந்திரணும்!' - இப்படியான அன்பை, உரிமையான அழைப்பை அதிகம் கண்டவர் நூர்ஜஹான்; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு உட்பட்ட குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலி.பணி துவக்கம்: 1992ம் ஆண்டுமுதல் களம்: குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டைபதவி: செவிலிதுறை அனுபவம்: 27 ஆண்டுகள்
நானே நம்பிக்கை
நான் பணியில சேர்ந்த நேரம். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடணும்னு சொன்னா யாரும் ஒத்துழைக்க மாட்டாங்க. மருந்து மேல நம்பிக்கை இல்லைங்கிறதை விட, என் மேல அவங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஆனா, இன்னைக்கு அந்த சூழல் இல்லை; என் கிராமத்து மக்களுக்கு நான்தான் பெரிய நம்பிக்கை. டாக்டர் ஒரு மருந்து சொன்னாகூட, என்கிட்டே அதை உறுதிப்படுத்திக்கணும்; அப்போதான் அவங்களுக்கு திருப்தி.
'செவிலி' வேலைக்கு சம்பளம் கிடைக்குறப்போ, இது எப்படி 'சேவைப்பணி'யாகும்?
'கொஞ்சம் உனக்கு ஓய்வு வேணும்'னு மூளை சொல்லும். அதேநேரம், 'உன்னை நம்பியிருக்கிற 5,535 கிராம மக்களுக்கு நீதான் ஆதரவு'ன்னு மனசு சொல்லும். உடனே ஸ்கூட்டரை எடுத்துட்டு கிளம்பிடுவேன். 'ஊதியம் வாங்கணும்'ங்கிறது மட்டுமே குறிக்கோளா இருந்தா இந்த உணர்வு சாத்தியப்படாது; இதை சேவையா நினைக்கணும். தவிர, 'உங்க குடும்பம், குழந்தைங்க எல்லாரும் நல்லா இருக்கணும்'ங்கிற ஆசிர்வாதம் இந்த சேவையிலதான் கிடைக்கும்.
பயம் துரத்து!
நோயோட வர்ற அத்தனை பேருக்கும், 'பயம் துரத்து'ங்கிறதுதான் நான் தர்ற முதல் அறிவுரை. 'நெருங்கி வரும்போதே அடிச்சு துரத்த வேண்டிய பெரிய நோய் பயம்'ங்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை!
பணி நேரத்துல கண்ணீர் வர வைச்ச சம்பவம்?
வயசு, 48 ஆகுது. இத்தனை ஆண்டுகளா பலதரப்பட்ட மனிதர்களோட வலிகளை பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். ஆரம்பத்துல சில சங்கடங்கள் இருந்தது. நோயாளியை துாக்கிட்டு பதற்றத்தோட வர்றவங்க, என்கிட்டேதான் கோபத்தை காட்டுவாங்க. 'இதுவும் கடந்து போகும்'னு அமைதியா இருந்தேன். இப்பவும் அப்படியேதான் இருக்குறேன்.
சுருக்
மனிதர்கள் நாம ஆரோக்கியமா இருக்குறப்போ ஏன் வாழ்க்கையை நேசிக்க மறந்து போறோம்