அன்புள்ள சிஸ்டர்!
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியாக இருக்கும் ஷோபனா வசிப்பது சொந்த ஊரில் என்றாலும், குடும்பத்தாரை சந்தித்து ஆறு மாதங்கள் ஆகிறது; ஏன்?பணி துவக்கம்: 2004முதல் களம்: அரசு மருத்துவமனை, துாத்துக்குடி.பதவி: செவிலிதுறை அனுபவம்: 16 ஆண்டுகள்நான் எனும் நாங்கள்கடந்த மார்ச் மாதத்துல இருந்து இப்போ வரைக்கும் கொரோனா சிகிச்சை பிரிவுலதான் எனக்கு பணி. விடுதிதான் வீடு. ஒரு வாரம் முழுக்க 'கொரோனா பாசிட்டிவ்' உள்ளவங்களுக்கு சிகிச்சை தரணும்; அடுத்த ஒரு வாரம் விடுதியில தனிமைப்படுத்திட்டு ஓய்வுல இருக்கணும்.வீடியோ கால் மூலமா தினமும் கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளே போயிட்டு வர்றேன். மூத்த பொண்ணு இந்த வருஷம் பிளஸ் 2. என் கணவர் வெளிநாட்டுல இருக்குறார். என் பெற்றோர்தான் என் ரெண்டு மகள்களையும் கவனிச்சுக்கிறாங்க. விடுதியில என்னோட இருக்குற 70க்கும் மேற்பட்ட செவிலியர்களோட வாழ்க்கை இப்படித்தான் போயிட்டு இருக்கு. கொரோனாவும் மனிதர்களும்'கொரோனா' பரவ ஆரம்பிச்ச நேரத்துல சிகிச்சைக்கு வந்தவங்களை விட, இப்ப வர்றவங்க உடல்ரீதியா கொஞ்சம் சிரமப்படுறதா எனக்குத் தோணுது. என்னோட 16 ஆண்டுகால அனுபவத்துல, மனிதர்கள் இப்படி பதறி நான் பார்த்ததில்லை. கொரோனாவுக்கு பிறகாவது வாழ்க்கைமுறையை மனிதர்கள் மாத்திக்கணும். ஆனா, அதுக்கான அறிகுறிகள் எதுவுமே இப்போ தென்படலை!நான் பெற்ற செல்வம்தற்கொலைக்கு முயற்சி பண்ணி விஷம் குடிச்சவருக்கு, நானும் இன்னொரு செவிலியும் மருந்து கொடுத்து வயித்தை சுத்தப்படுத்திட்டு இருந்தோம். வாந்தி எடுக்க எடுக்க அவர் கருவிழி மேல போகுது; மரணவலியை உணர்ந்துட்டாரோ என்னவோ, 'அம்மா... அவசரத்துல தப்பு பண்ணிட்டேன்; எப்படியாவது காப்பாத்திடு'ன்னு என் கைபிடிச்சு அழுறாரு. அன்னைக்கு அவர் பிழைச்சதும், எனக்குள்ளே அப்படி ஒரு நிம்மதி; அன்னைக்கு ராத்திரி ஒரு துாக்கம் துாங்கினேன் பாருங்க... செம திருப்தி!உங்களுக்கான அங்கீகாரம் கிடைச்சிட்டதா நினைக்கிறீங்களா?'அங்கீகாரம் வேணும்'ங்கிறது எல்லா மனிதர்களுக்குமான உணர்வு; செவிலியருக்கும் அது உண்டு. ஆனாலும், அங்கீகாரம் கிடைக்காத சூழல்லேயும் சோர்ந்து போகாத ஆட்கள் நாங்க! கண்ணாடி மாதிரியான உயிர்களை கையில சுமக்குறப்போ, நாங்க மனம் தளரக் கூடாது; தளரவும் மாட்டோம். சுருக்: சமீபகாலமா, முதியோர் உயிர்கள் மதிப்பிழந்து வர்றதை தினமும் பார்க்குறேன்!வாய்ஸ்: எப்பிறவியிலும் இப்பணியே என் ஆசை!