உள்ளூர் செய்திகள்

திருமதி விவசாயி

இயற்கை விவசாயத்தில் 40 ஏக்கரில் திராட்சை சாகுபடி, மதிப்பு கூட்டு பொருளாக 'திராட்சை காய் ஊறுகாய்' என் சாதித்து நிற்கிறார் கோவை துளசிமணி.வயது 49கணவர்: கே.ஆர்.மாறன்பேரூர் - கரடிமடை சிறுவாணி சாலையில், 6வது கிலோ மீட்டரில் இருக்கிறது இவரது குப்பனுார் கிராமம்.

திராட்சையில் ஊறுகாயா?

ஆமா... திராட்சை கொடி பிரசவிக்கிற முதல் திராட்சைகள் ருசியா இருக்காதுங்கிறதால கொடியை வெட்டி விட்டிருவோம். அந்தசமயத்துல வீணாகுற திராட்சை காய்களை வைச்சு ஊறுகாய் போடலாம்னு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமா தெரிய வந்தது; பயிற்சியும் அங்கேயே கிடைச்சது.நல்லெண்ணெய், கடுகு சேர்த்து பச்சை நிறம் போற வரைக்கும் திராட்சை காயை வதக்கி, அரைச்ச வெந்தயம், மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கூழ் பதத்துக்கு கிளறி, காயோட புளிப்பை ஈடுகட்ட கருப்பட்டி சேர்த்து கண்ணாடி குடுவையில நிரப்பிடுவோம்.வேளாண் பல்கலைக்கழக மேற்பார்வையில தயாரிக்கிறதால, தரச்சான்றிதழ் அவங்க மூலமாகவே கிடைச்சிடுது. 300 கிராம் திராட்சை காய் ஊறுகாய், 80 - 100 ரூபாய் வரைக்கும் போகும்.

ஒருநாள் பொழுது?

திராட்சை தவிர சின்ன வெங்காயம், தக்காளி, முள் சீத்தாபழம்னு 30 ஏக்கர்ல போட்டிருக்கோம். காலையில 9:00 மணிக்கு கிளம்பினா காட்டு வேலை முடிச்சுட்டு வரவே சாயங்காலம் ஆயிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !