ADDED : செப் 25, 2022 | ADDED : செப் 25, 2022
'அறிவுப் பூர்வமாக உழைத்தால் கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் சாத்தியம்' என்கிறார் சேலம், களஞ்சியம் ஜீவி தம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களில் ஒருவரான சாந்தி.
ஒன்றிணைந்தோம்
கடலை, எள், தேங்காய்னு எண்ணெய் வித்துக்கள் சார்ந்த பயிர்களை பயிரிட்டோம்... அறுவடை பண்ணினோம்... சந்தையில கொடுத்தோம்னு இருந்த நாங்க, 'களஞ்சியம் ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' உருவாக்கினதும் வாழ்க்கையில மாற்றத்தை உணர்ந்தோம்.பெண்கள் கைகோர்த்து, 'தமிழக வேளாண் விற்பனை வணிகத்துறை - நபார்டு வங்கி' மானிய உதவியோட எண்ணெய் வித்துக்கள்ல இருந்து எண்ணெய் எடுத்தோம்; மொச்சை/ துவரை மாவு தயாரிச்சோம்; இப்போ, நிறுவனத்துல 2,555 பங்குதாரர்கள் இருக்குறாங்க! செலவுகள் போக லாபத்தை உறுப்பினர்கள் பிரிச்சுக்குறோம்!
நிறைவான வெற்றி
சமீபத்திய 2021ம் ஆண்டுல, 15 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்; 'நாட்டுக்கு முன்னுதாரணம்'னு பிரதமர் மோடி எங்களை பாராட்டினதுல பெரும் நிறைவு!
அரசுக்கு ஒரு வேண்டுகோள்...
சாந்தி: விவசாயிகள் தயாரிக்கிற மதிப்புக்கூட்டு பொருட்களை நியாயவிலை கடைகள் மூலமா விற்பனைக்கு கொண்டு வரணும்.சேலம் - சங்ககிரி சாலையின் அரியானுாரியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது இவரது வீரபாண்டி கிராமம்.கணவர்: ராஜுவயது: 40குழந்தைகள்: ஒரு மகன்/ ஒரு மகள்