பெண்மை என் பெருமை
'சுதந்திரம்' என்ற சொல்லை சற்று விளக்கி எழுதினால் 'தன் விருப்பத்தில் வாழ்தல்' என்று எழுதலாம். இதுவே பெயர்ச் சொல்லானால்... கலைவாணி.2,313 கி.மீ., - 40 மணி நேரங்கள்; இச்சாதனையை, தன் வசிப்பிடமான சென்னையில் இருந்து புனே வரை இரு சக்கர வாகனத்தில் தனியாகவே பயணித்ததன் மூலம் எட்டியிருக்கிறார் கலைவாணி. இது, 'இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில்' இடம் பெற்றிருக்கிறது.எதைத்தேடி இந்த பயணம்?'எனக்குள்ளே இருக்குற என்னைத் தேடித்தான்'னு சொல்லி கதையளக்க விரும்பலை. சின்ன வயசுல இருந்தே வண்டி ஓட்டப் பிடிக்கும்; திருமணத்துக்கு அப்புறம் கணவரும் இதை ஊக்குவிக்க, என் விருப்பத்துல வாழ்ந்து பார்க்க பயணப்பட்டேன்; மத்தபடி, இதை நான் சாதனைக்காக செய்யலை! உங்களுக்கும் சராசரி பெண்ணுக்குமான வித்தியாசம்?அய்யோ... நீள கூந்தலை கட் பண்ணிட்டு, டூ வீலர் ஓட்டுறதனால நான் தனித்துவமான பெண்ணெல்லாம் இல்லை; நானும் சராசரி பெண்தான்! சமூக அளவுல மற்ற பெண்களுக்கு இருக்குற தடைகள் எனக்கும் இருக்கு. என்ன... அதோட பாதிப்புகளை என் குடும்பம் உணர்றதால என்னால தடைகளை கடக்க முடியுது. அடி மனசுல விருப்பமும், அதற்கான முயற்சியும் இருந்தா எல்லாமே தானா நடக்கும்.திருவண்ணாமலை செய்யாறு, கலைவாணியின் பூர்வீகம். 18 வயதில், 'டிவிஎஸ் 50'ல் தன் பயணத்தை துவக்கியவர், 42 வயதில் 'பஜாஜ் அவெஞ்சரில்' பறக்கிறார். 14 வயது மகனுடன், 'ரோடு டிரிப்' செல்வதில் இவருக்கு அலாதி பிரியம். சட்ட படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார்.உங்க விருப்பத்துக்கு உங்க பொருளாதார சூழல் உதவிசெய்யுது; சரிதானே?ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்... எனக்கும் வாழ்வாதார சிரமங்கள் இருக்கு. வாழ்க்கையில இஷ்டத்துக்கு பின்னால போகணுமா...- கஷ்டத்துக்கு பின்னால போகணுமான்னு ஒரு கட்டம் உண்டு; நான் இஷ்டத்துக்கு பின்னால போறேன்... கஷ்டம் பின் தொடருது! ஆனாலும், அதை சமாளிச்சு இத்தனையையும் பண்றேன்!பயண அனுபவங்கள்?மொழி தெரியாத ஊர் சாலையில, மனித நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்துல பயணிக்கும் போது பதற்றமா இருந்தது. அந்த தருணத்துல, வண்டி இன்ஜின் சத்தத்தோட இதயத்தை இணைச்சிட்டேன்... பயம் பறந்திடுச்சு!உங்களுக்கு ரொம்பவே தைரியங்க...தைரியம் எல்லாம் அப்புறம்; என் தன்னம்பிக்கை தான் இத்தனைக்கும் காரணம்.கலைவாணியின் புதுப்புது அர்த்தங்கள்* வாழ்க்கை? - வாகனம்* விருப்பம்? எரிபொருள்