உள்ளூர் செய்திகள்

என்டே உம்மான்டே பேரு (மலையாளம்)

சமைச்சு போடுறதையும் துவைச்சு போடுறதையும் தவிர்த்து, பெத்த பிள்ளைங்க மேல இருக்கிற பாசத்தை என்னைக்காவது உணர்த்தி இருக்கீங்களா; எதுக்காக உணர்த்தணும்?நான் ஆயிஷா; ஹைதர் அலியோட மனைவி. அவர் இப்போ உயிரோட இல்லை. நானும், ஹமீதும் ஒரு பெண்ணைத் தேடி ஊர் ஊரா சுத்திட்டு இருக்குறோம். ஹமீத்... என் கணவரோட மகன்; ஆமா... அவன் அம்மா நான் இல்லை; எனக்கோ... அவனை விட்டா யாரும் இல்லை.ஒருநாள், எங்க தேடலுக்கு பலன் கிடைச்சது; தன் அம்மாவை ஹமீத் சந்திச்சான். ஆனா... அவங்க அவனை ஏத்துக்குற நிலையில இல்லை.கண்கலங்கி வந்த அவன்... 'இனிமே நீங்க தான் என் அம்மா'ன்னு சொல்லி அணைச்சுக்கிட்டான். பீறிட்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கின நான்...'ஹமீது... உன் அம்மா ஒருதடவை தான் உன்னை பிரசவிச்சா; நான் என் மனசுக்குள்ளே ஒவ்வொரு நாளும் பிரசவிச்சுட்டு இருக்குறேன்டா...'ன்னு சொல்லி, அவனை கட்டிப் பிடிச்சு அழுதேன். என் பாசத்தை உணர்ந்ததுக்கு அடையாளமா, நீண்ட பெருமூச்சோட கண்களை துடைச்சுக்கிட்டான் ஹமீத்.தாயா - பிள்ளையா இருந்தாலும், இதயத்துலேயே அன்பை பூட்டி வைச்சிருந்தா வாழ்க்கை இனிக்காது; சரிதானே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !