நிழல் பேசும் நிஜம்!
எனக்கொரு கேள்வி! ரயில் நடைமேடையில நான் மயங்கி அவர் மேல விழுந்தேன்; அதுதான், அவரோட எனக்கு முதல் சந்திப்பு. அடுத்த சந்திப்புல 'நான் உமேஷின் மனைவி இராவதி'ன்னும், 'நான் மிருதுளாவின் கணவர் ப்ரீத்தம்'னும் பரஸ்பரம் உணர்த்திக்கிட்டோம். அடுத்தடுத்த சந்திப்புகள்ல என் டைரி கவிதைகளை படிச்சிட்டு புத்தகமா வெளியிடச் சொன்னார்; என் பலவீனங்களை கடக்க உதவினார்; தன் மனைவி, குழந்தைகளோட அவர் சந்தோஷமா வாழ்றதைப் பற்றி நிறைய பகிர்ந்தார்! ஒரு கட்டத்துல... 'ப்ரீத்தமோட மனைவியும், குழந்தைகளும் உயிரோட இல்லை'ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இதனால மனைவி, குழந்தைகள் உடனான அவரோட கற்பனை உலகம் முடிவுக்கு வந்திருச்சு! குடும்பத்தை இழந்ததால எழுந்த தற்கொலை எண்ணம் பற்றி பகிர்ந்தவர், இனி தன்னை சந்திக்க வேண்டாம்னும் சொன்னார். ஒன்பது மாதங்கள் கடந்திருச்சு; இப்போவரைக்கும் நான் அவரை சந்திக்கலை. ஆனா, அவருக்காக என் கவிதை புத்தகத்துல இப்படி எழுதினேன்...'ஒருவேளை நீங்கள் தற்கொலை செய்து கொண்டால் உங்களுடன் சேர்ந்து என் ஆன்மாவின் ஒருபகுதியும் நிச்சயம் இறந்து போகும்!'என் கேள்வி... 'இப்படியொரு உறவு ஒரு குடும்பத்தலைவியோட வாழ்க்கையில குறுக்கிட்டா அவ அதை கணவருக்கு சொல்லணுமா?' ப்ரீத்தம் பற்றி உமேஷ்கிட்டே நான் சொல்ல முயற்சி பண்ணினேன்; ஆனா, சொல்லலை. படம்: 8 ஏ.எம்., மெட்ரோ (ஹிந்தி)