உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம்

நான் மஹிமா, என் கணவர் மேஹந்திரா.என் மஹேந்திராவுக்கு புகழ்மிக்க கிரிக்கெட் வீரர் ஆகணும்னு கனவு; ஆனா, அவரால முடியலை. திருமணத்துக்கு அப்புறம், கிரிக்கெட் ஆடுற என் திறமையை அவர் பட்டை தீட்டினார். என் மேல உள்ள காதலால இதை செய்றார்னு நான் ரொம்ப நம்பினேன்; ஆனா, அவரோட புகழ் பசிக்கு என் திறமையை இரையாக்கி இருக்குறார். இதனால, எங்களுக்கு இடையில மனஸ்தாபம்! அப்போ என் மாமியார் கீதா அவர்கிட்ட பேசினாங்க...'இந்த உலகம் உன்னை கொண்டாடுறதுதான் சந்தோஷம்னு நீ ஏன்டா நினைக்கிறே; சந்தோஷத்தை புகழ்ல தேடாம, உன் மனசுல தேடுப்பா!''நீங்க சொல்றது வெளி உலகத்துக்கு பொருந்தாதும்மா; உங்க செயலுக்கு ஈடானது கிடைக்காத வரைக்கும் என் நிலைமை உங்களுக்குப் புரியாது!''எந்த உலகத்தைடா சொல்றே... சின்ன வயசுல நீ சந்தோஷமா கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தப்போ அந்த உலகம் எங்கேடா இருந்தது; இதோ பார்... நான் உனக்கு செய்றதுக்கெல்லாம் ஈடா என்ன எதிர்பார்க்கிறேன்னு நீ நினைக்கிறே; டேய்... இதெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னோட சந்தோஷத்துக்காக நான் செய்றதுடா!'என் மாமியார் இப்படி சொன்னதுக்கு அப்புறம், 'நான் இப்போ சந்தோஷத்தை உணர கத்துக்கிட்டேன் மஹிமா'ன்னு அவர் என்கிட்டே சொன்னார்.உங்க சந்தோஷத்தை நீங்க உணர்ந்திருக்கீங்களா?படம்: மிஸ்டர் & மிஸஸ் மஹி (ஹிந்தி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !