நிழல் பேசும் நிஜம்!
இது 31வது சம்பந்தம்; ஒருவழியா இதுல எனக்கு திருமணம் உறுதியானதுல வீட்டுல எல்லாருக்கும் சந்தோஷம்.முகூர்த்த நேரம்; மணமேடையில இருந்த நான் விருந்தினர்களுக்கு எதிர்ல மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சேன். 'எல்லாருக்கும் வணக்கம். என்னை கல்யாணம் பண்ணிக்க இருந்தவர் தன் மனசுக்கு பிடிச்ச பெண்ணோட போயிட்டார். இந்த விஷயம் நேத்து ராத்திரிதான் எனக்கு தெரிய வந்தது. 'நடந்ததை நினைச்சு வருத்தப்படாம இந்த பொண்ணு என்ன இப்படி நிற்குது'ன்னு நீங்க நினைக்கலாம். 'நான் அப்படி வருத்தப்படுற பெண் இல்லை. என் மேல விருப்பமே இல்லாத அவரை கல்யாணம் பண்ணி இருந்தாத்தானே நான் வருத்தப்படணும்; நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை!'இதுல வேடிக்கை என்னன்னா, எனக்கும் அவருக்கும் 10க்கு 8 பொருத்தம் இருக்கிறதா ஜோதிடர் சொல்லியிருந்தார். நமக்கு சம்பந்தமில்லாதவங்க நம்ம எதிர்காலத்தை முடிவு பண்ணினா இப்படித்தான்; சத்தியமா சொல்றேன்... இனி நான் என் வாழ்க்கையை இப்படி அணுக மாட்டேன்!' மண்டபத்தில் கனத்த மவுனம்; சில வினாடிகளுக்குப் பின்... விருந்தினர்கள் மத்தியில பெரும் கரவொலி!இந்த நிழலோட முடிவு நிஜத்துல சாத்தியமற்றதா தோணலாம்; ஆனா, 'உங்க வாழ்க்கைக்கான முடிவுகளை நீங்களே எடுக்க முடியும்'ங்கிறது மட்டும் நிஜம்.படம்: அர்ச்சனா 31 நாட் அவுட் (மலையாளம்)