நிழல் பேசும் நிஜம்!
நான் அஞ்சலி; காவல் துணை ஆய்வாளர்.ஒருத்தன் 27 பெண்களுக்கு திருமண ஆசைகாட்டி, அவங்களை வீட்டுல இருந்து வெளியேற வைச்சு கொலை பண்ணிட்டான்; அந்த கொலைகாரனை தேடிப் பிடிக்கிற பொறுப்பு எனக்கு!ஒருநாள், வழக்கம்போல என் அம்மா ஒரு பையனோட புகைப்படத்தை காட்டி திருமணத்துக்கு வற்புறுத்தினாங்க. நான் அந்த 27 பெண்களோட புகைப்படங்களை அவங்களுக்கு காட்டி... 'ஆண் இல்லாம பெண் வாழ்ந்தா அவ எதிர்காலத்துக்கு பாதுகாப்பு கிடையாது; திருமணம் ஆகலேன்னா வாழாவெட்டி ஆயிடுவே'ன்னு சொல்லி, இந்த 27 பெண்களையும் அவங்க குடும்பம் திருமணத்துக்கு வற்புறுத்தியிருக்கு!'எதிர்காலம் மீதான இந்த அழுத்தத்துல இருந்தவங்ககிட்டே, ஒருத்தன் சிரிச்சு அன்பா பேசினதும் அவனை நம்பி வீட்டை விட்டு கிளம்பிட்டாங்க! கொலைகாரன் அந்த பெண்களை சுலபமா பயன்படுத்திட்டு கொலை பண்ணிட்டான்!'ஒருவேளை, திருமணம் ஆகாத அந்த பெண்களை அவங்க குடும்பங்கள் பாரமா நினைக்காம இருந்திருந்தா, அவங்க சுதந்திரத்துக்கு மதிப்பு தந்திருந்தா அந்த கொடூரன் வலையில யாரும் சிக்கியிருக்க மாட்டாங்க!'இப்போ சொல்லுங்கம்மா... இந்த கொலைகள்ல அந்த குடும்பங்களுக்கும் பங்கிருக்கா... இல்லையா?' - இப்படி நான் கேட்டதும் என் அம்மாகிட்டே மவுனம்; உங்களுக்கு பதில் தெரியுமா?இணைய தொடர்: தாஹத் (ஹிந்தி)