உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம்!

நான் காவேரி; 'மகள், மனைவி, மருமகள், அம்மா' பொறுப்புகள்ல சரியா இருந்திருக்கேன்; ஆனா, இதுக்காக நான் அங்கீகரிக்கப்படலை! அன்னைக்கு, என் பொண்ணு நிவி முகத்துல ஒரு சலனம். அந்த சூழ்நிலைதான் அவளை என்கிட்ட பேச வைச்சது!'என் எதிர்ல காதல் - லட்சியம்னு ரெண்டு இருக்கும்மா; ஆனா, ஏதோ ஒன்னைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்; நான் என்னம்மா பண்றது?'ஒரு அம்மாவா எனக்கு அங்கீகாரம் கிடைச்ச உணர்வுல சொன்னேன்; 'என் பொண்ணு என்கிட்டே ஆலோசிக்கிறா; 'என் அம்மாவுக்கு பதில் தெரியும்'ங்கிற மாதிரி மரியாதை கொடுக்குறா; நிவி... இன்னைக்கு தான் எனக்கு அன்னையர் தினம்!'அடுத்து ஒரு பெண்ணா சொன்னேன்...'நிவி... பிடிச்சதை வாழ்க்கையா எடுத்துக்கிற சுதந்திரம் உன் காலத்துல இருக்கு. எனக்கு பாட பிடிக்கும்; ஆனா, அதை வாழ்க்கையா எடுத்துக்க, என் காலத்துல சுதந்திரம் இல்லை. என் ஆசைக்காக இப்போ பாடலாம்தான்; ஆனா, எனக்கு அதுல விருப்பமில்லை!'இத்தனை வருஷத்துல எந்த ஏக்கமும் எனக்குள்ளே இல்லை; எப்படி சுத்தி சுத்தி வந்தாலும் கடைசியில நானொரு அம்மா; இது எனக்கு போதும் நிவி. அதேமாதிரி உனக்கு எது போதும்னு உனக்கு மட்டும்தான் தெரியும்!'நிவி முகத்துல அழகா புன்னகை; அதைப் பார்த்ததும் எனக்குள்ளே அம்மாவா, பெண்ணா காலுான்றி நின்ன உணர்வு!குடும்ப உறவுகள் உங்களை அங்கீகரிக்குதா?-படைப்பு: ஸ்வீட் காரம் காபி(இணைய தொடர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !