உள்ளூர் செய்திகள்

காதலுடன் கண்ணம்மா

செடி கொடிகளோடு கதை பேசும் மனம் படைத்தவளே...'வெனிலா' ருசி மிகவும் பிடிக்குமா உனக்கு; சென்னை ஈச்சங்காட்டில் செயல்படும் 'பிரணிபிரவ்' விற்பனையகத்தில், 'வெனிலா' மூலப்பொருளான 'வெனிலா பீன்' செடி பார்த்தேன். 'இன்டோர் பிளான்ட்' விற்பனையகமான இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட வகைகள் பசுமை ததும்ப வளர்ந்து நிற்கின்றன! காற்றில் கலந்திருக்கும் நச்சுக்களையும் துாசுக்களையும் உறிஞ்சும் தாவரங்களாக 'நாசா'வால் அடையாளப்படுத்தப்பட்டவை, 19 வகையான உயிர்ச்சத்து உரத்துடன் இங்கு வளர்கின்றன; இவற்றோடு, ஊனுண்ணி தாவர வகைகளும் உண்டு. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ற குறைவான பராமரிப்பு தேவையுள்ள தாவரங்கள் இங்கு அதிகம்!குறைந்தது 100 சதுர அடியிலும் 5,000 ரூபாய் செலவில் தோட்டம் அமைத்து தருகின்றனர். இங்கு கண்ணாடி குடுவைகளுக்குள் வளரும் 'டெராரியம்' வகைகளும், 'மினியேச்சர் கார்டன்' வடிவமைப்புகளும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. வசீகர நீரூற்று, அதனைச் சுற்றிலும் தாவரங்கள், அதனைச் சுற்றிவரும் மீன்கள் என வடிவமைக்கப்பட்டிருக்கும் தொட்டி... அழகின் உச்சம். வெறும் 50 ரூபாய்க்கும் இங்கு தாவரம் வாங்கலாம்; இயற்கையோடு பழகலாம். காதலுடன்... கண்ணம்மா.91118 11131


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !