உள்ளூர் செய்திகள்

கொரோனாவும் ஆர்சினிகம் ஆல்பமும்

கொரோனா அறிகுறிகளில் முதன்மையானது தொண்டை வலி, உடல் வலி,சளி, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு திணறல். இந்த அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதாரம் அவசியம். கண்கள், வாய், மூக்கை சுத்தம் செய்யாத கைகளால் தொடக்கூடாது. கைகளை சோப்பால் குறைந்தது இருபது விநாடிகள் சுத்தம் செய்வது அவசியம். இதனை குழந்தைகள் செய்வதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். கீரை வகைகள், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் சாப்பிடவும். இஞ்சி, மிளகு, மஞ்சள், துளசி ஆகியவற்றை மூன்று நிமிடம் நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும்.தினசரி மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமம் செய்வது அவசியம். மனப் பதற்றத்தையும், பிராணயாமம் குறைக்கும். ஹோமியோபதி சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மருந்தை உட்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.உணவு சாப்பிடுவதற்கு முன்,ஒரு நாளுக்கு இரண்டு வேளை கணக்கில், மூன்று நாட்கள் எடுக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்ட பின்பும், அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹோமியோபதியில் மருந்துகள் உண்டு.கொரோனாவுக்கு எதிராக நாட்டை காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த தடுப்பு மருந்தை நாங்கள் இலவசமாக வழங்கி உள்ளோம்.-டாக்டர் மதுமிதாஹோமியோபதி மருத்துவர்,மதுரை89392 66767


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !