கிரியேட்டர்களுக்கான லேப்டாப்
தைவானை சேர்ந்த 'அசுஸ்' நிறுவனம், இந்தியாவில் கிரியேட்டர்களுக்காக பிரத்யேகமாக, 'புரோ ஆர்ட் சீரிஸ்' லேப்டாப்களை அறிமுகம் செய்து உள்ளது. புரோ ஆர்ட் சீரிஸில் மொத்தம் எட்டு லேப்டாப்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 'விவோபுக்' மாடலில் ஏழு லேப்டாப்புகளும்; ஒரு 'ஸ்டூடியோ புக்' லேப்டாப்பும் அடக்கம். இந்த வகை லேப்டாப் மாடல்கள், இந்தியாவில் உள்ள கிரியேட்டர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இவற்றின் விலை 74 ஆயிரத்து, 990 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இதன் பிளாக்ஷிப் மாடலான 'புரோஆர்ட் ஸ்டூடியோபுக் 16 ஓ.எல்.இ.டி., லேப்டாப்'பின் விலை 1,69,990 ரூபாய் ஆகிறது.