வீட்டுக்குள் ஒரு மெகா தியேட்டர்
'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு 'போர்ட்டபிள் புரொஜெக்டரை' அறிமுகம் செய்துள்ளது. 'போர்ட்ரானிக்ஸ் பீம் 300' எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ள இந்த புரொஜெக்டர், ஒரு 'வைபை மல்டிமீடியா எல்.இ.டி., புரொஜெக்டர்.இதன் வாயிலாக, 50 அங்குலத்திலிருந்து 200 அங்குலம் வரையிலான அளவில் திரையிடலாம். இதிலுள்ள 'புரொஜெக் ஷன் பல்ப்' 30 ஆயிரம் மணி நேரம் வரை தாங்கும். இதில் 10 வாட் ஸ்பீக்கர், உள்ளே 'இன்பில்ட்' ஆக உள்ளது.ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், கேம் கன்சோல் என பலவற்றை இதில் இணைக்க முடியும்.விலை: 19,999 ரூபாய்