உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்காக ஒரு ஸ்மார்ட்வாட்ச்!

அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்மின்' நிறுவனம், குழந்தைகளுக்காக, பிரத்யேகமான ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.'கார்மின் பவுன்ஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில், ஜி.பி.எஸ்., மற்றும் 4ஜி எல்.டி.இ., இணைப்பு ஆகியவை 'இன் பில்டு' ஆகவே கொடுக்கப்பட்டு உள்ளது.இவற்றின் துணையுடன், குழந்தை எங்கே இருக்கிறது என்பதை, பெற்றோர் தங்கள் ஸ்மார்ட்போன் வாயிலாக எளிதாக 'டிராக்' செய்யலாம். மேலும், அவர்களுடன் 'டெக்ஸ்ட்' அல்லது 'வாய்ஸ்' மெசேஜ் வாயிலாக தொடர்பு கொள்ளவும் முடியும். இதற்காக, 'கார்மின் ஜூனியர் ஆப்' எனும் செயலியை, போன் வாயிலாக பயன்படுத்தலாம்.இந்த ஸ்மார்ட்வாட்சின் செயல்பாடுகளைகளையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயலி வாயிலாகவே கட்டுப்படுத்தவும் முடியும்.பெற்றோர் அனுமதிக்கும் நேரத்தில் இந்த வாட்சில் விளையாடவும் முடியும். மேலும், பள்ளி நேரத்தில் அல்லது இரவு நேரத்தில், வாட்சின் செயல்பாடுகளை, செயலி வாயிலாக மூடவும் முடியும். ஒரு சார்ஜில் இரண்டு நாட்கள் வரை பேட்டரி தாங்கும்.இதன் விலை, தோராயமாக 12 ஆயிரம் ரூபாய் ஆகிறது. விரைவில் பிற நாடுகளிலும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !