கலக்கலான கார்மின் வாட்சுகள்
'கார்மின்' நிறுவனம், இந்தியாவில், அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'கார்மின் பெனிக்ஸ் 7 வரிசை' மற்றும் 'கார்மின் எபிக்ஸ்' ஆகிய ஸ்மார்ட்வாட்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.பெனிக்ஸ் 7 வரிசை: கிராமின் பெனிக்ஸ் 7 வரிசை ஸ்மார்ட்வாட்சுகளில் நான்கு விதமான பிரைட்னஸ் அளவுகள் உள்ளன. மேலும் அவசரகால உதவி கோரிக்கைக்காக, ஒளிரும் சிவப்பு விளக்கும் உள்ளது. நீடித்து நிற்கும் பேட்டரியுடன், சூரிய ஒளியில் செயல்படும் வசதியும் இவற்றில் உள்ளது. கிட்டத்தட்ட 40 இன்பில்ட்டு ஸ்போர்ட்ஸ் மோடுகளும் இதில் இடம்பெற்று உள்ளன.எபிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்: கார்மின் எபிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் 'டச்' வசதியுடன் கூடிய 'அமோல்டு' ஸ்கிரீன் கொண்டது. உராய்வால் சேதமாகாது. இதிலும் 40 ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. மேலும், 'ரியல் டைம் ஸ்டெமினா'வையும் அளவிடலாம். இதன் பேட்டரியும் நீடித்து நிற்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.விலை: கார்மின் பெனிக்ஸ் 7 வரிசை ஸ்மார்ட்வாட்சுகளின் விலை 67 ஆயிரத்து 990 ரூபாயில் துவங்குகிறது. கார்மின் எபிக்ஸ் வாட்ச் விலை 89 ஆயிரத்து, 990 ரூபாய் ஆகிறது.