உள்ளூர் செய்திகள்

ஜிமெயில் தேட அலெக்ஸா உதவாது

அமேசானின் நிறுவனத்தின் 'அலெக்ஸா' எனும் 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வாயிலாக, இனி பயனர்கள் ஜிமெயில், மைக்ரோசாப்ட் மெயில் ஆகியவற்றை அணுக முடியாது.ஆனால், இமெயில் சேவைகளை வழங்கும் பிற நிறுவனங்களின் மின்னஞ்சலை அணுக முடியுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.நவம்பர் 8ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அலெக்ஸாவை பயன்படுத்தி மெயில்களை தேடுவது அல்லது அணுகுவது போன்ற பணிகளை மேற்கொள்ள இயலாது என அமேசான் தெரிவித்துள்ளது.மேலும், அலெக்ஸா வாயிலாக இனி அமேசான் அல்லாத பிற நிறுவனங்களின் பொருட்களை 'டிராக்' செய்யும் பொருட்டு, 'இமெயில் பேக்கேஜ் டிராக்கிங்' வசதியையும் பயன்படுத்த இயலாது என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அமேசானில் ஆர்டர் செய்த பொருட்களின் நிலை குறித்து, அலெக்ஸா வாயிலாக அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !