அமேசானின் புதிய டேப்லெட்டுகள்
அமேசான் நிறுவனம் அண்மையில், பயர் எச்.டி., 10, பயர் எச்.டி., 10 பிளஸ், பயர் எச்.டி., 10 கிட்ஸ் மற்றும் பயர் கிட்ஸ் புரோ டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.பயர் எச்,டி., 10 மற்றும் 10 பிளஸ்: அமேசான் பயர் எச்.டி., 10 மற்றும் பயர் எச்.டி., 10 பிளஸ் ஆகிய இரண்டும், 10.1 அங்குல முழு எச்.டி., திரை கொண்டதாகும். 2.0 ஜிகாஹெர்ட்ஸில் ஆக்டா கோர் செயலிகளால் இவை இயக்கப்படுகின்றன. பயர் எச்.டி., 10 டேப்லெட், 3 ஜி.பி., ரேம் கொண்டதாகும். பயர் எச்.டி.,10 பிளஸ், 4 ஜி.பி., ரேம் உடன் வந்துள்ளது. இரண்டுமே 32 ஜி.பி., மற்றும் 64 ஜி.பி., சேமிப்பு வசதிகளுடன் வந்துள்ளன. மேலும் மைக்ரோ எஸ்.டி., கார்டு வாயிலாக, 1 டி.பி., வரை சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.இவை நான்கு வண்ணங்களில் வந்துள்ளன. அமேசான் பயர் எச்.டி., 10 விலை, இந்திய மதிப்பில், 11 ஆயிரம் ரூபாயில் துவங்குகிறது. அமேசான் பயர் எச்.டி., 10 பிளஸ் விலை, 13 ஆயிரத்து, 500 ரூபாயிலிருந்து துவங்குகிறது.பயர் எச்.டி., 10 கிட்ஸ்: அமேசான் பயர் எச்.டி., 10 கிட்ஸ் கிட்டத்தட்ட பயர் எச்.டி., 10 டேப்லெட்டின் அதே அம்சங்களையே கொண்டிருக்கிறது. சில வித்தியாசங்கள் மட்டுமே இருக்கின்றன. உதாரணமாக இதன் சேமிப்பு திறன் 32 ஜி.பி., மட்டுமே. ஆனால் மைக்ரோ எஸ்.டி., கார்டு வாயிலாக சேமிப்பு திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அடுத்து இதில் புளுடூத் இணைப்பு இல்லை. இது போன்ற சில வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன.இதன் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இந்த டேப்லெட் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பயர் எச்.டி., கிட்ஸ் புரோ: அமேசான் பயர் எச்.டி., 7 கிட்ஸ் புரோ மாடல், 7 அங்குல திரையுடன் 1,024x600 பிக்சல்கள் கொண்டதாகும். பயர் எச்.டி., 8 கிட்ஸ் புரோ டேப்லெட் 8 அங்குல திரையுடன் 1,280x800 பிக்சல்கள் கொண்டதாகும். அதேபோல், பயர் எச்.டி., 10 கிட்ஸ் புரோ மாடல் 10.1 அங்குல திரையுடன் 1,920x1,200 பிக்சல்கள் கொண்டதாகும்.இவை 1, 2, மற்றும் 3 ஜி.பி., ரேம் கொண்டவையாகும். மேலும்,7 கிட்ஸ் புரோ, 16 ஜி.பி., சேமிப்பகத்துடன் வந்துள்ளது. மைக்ரோ எஸ்.டி., கார்டு வாயிலாக, 512 ஜி.பி., வரை அதிகரித்துக் கொள்ளலாம். மற்ற மாடல்கள், 32 ஜி.பி., சேமிப்பகத்துடன் வந்துள்ளன. இவற்றை, 1 டி.பி., வரை அதிகரித்துக் கொள்ள முடியும். மாடலை பொறுத்து, 7 மணி முதல் 12 மணி நேரம் வரை இவற்றின் பேட்டரி திறன் நீடிக்கிறது.அமேசான் பயர், 7 கிட்ஸ் புரோவின் விலை கிட்டத்தட்ட, 7,500 ரூபாய் ஆகிறது. பயர் எச்.டி., 8 கிட்ஸ் புரோ விலை, 10,400 ரூபாய் ஆகிறது. பயர் எச்.டி., 10 கிட்ஸ் புரோ விலை,14,900 ரூபாயாகும். இந்த மாடல்கள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு, 26ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.