உள்ளூர் செய்திகள்

தமிழ் தொடர்கதைகளை வாசிக்க ஒரு செயலி

புத்தக வாசிப்புகள் அரிதாகிக்கொண்டிருக்கும் காலத்தில், அவற்றுக்கு புத்துணர்ச்சியூட்டும் முயற்சிகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருவது ஆறுதலான விஷயம். சமீபத்திய ஆறுதல், தொடர்கதைகளுக்காகவே, 'பிஞ்ஜ்' ( Bynge ) எனும் ஒரு செயலி வந்துள்ளதுதான்.பிரபல எழுத்தாளர்களின் கதைகளை, இந்த செயலி வாயிலாக இலவசமாகவே படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவு அல்லாத படைப்புகளை, சிறிய சிறிய அத்தியாயங்களாக இதில் படிக்கலாம். சரித்திரம், சமூகம் மற்றும் காதல் கதை ஆர்வலர்களுக்கு தீனி போடும் விதமாக இது வந்துள்ளது.கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். கையடக்க போனில் பிரமாண்டமான ஒரு நுாலகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !