உள்ளூர் செய்திகள்

அதிரடிக்கு தயாராகும் ஆப்பிள் ஹெட்செட்

'ஆப்பிள்' நிறுவனம், 'மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்' தயாரிப்பில் மிகவும் மும்முரமாக உள்ளது. இதையடுத்து, இதற்கு தேவையான உள்ளடக்கங்களுக்கு பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.குறிப்பாக 'வால்ட் டிஸ்னி, சோனி குழுமம்' ஆகியவற்றுடன் கூட்டணி சேரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பேச்சுகளும் நடைபெற்று வருகின்றன.சோனி குழுமம் 'விர்ச்சுவல் ரியாலிட்டி'க்காக, இரண்டு 'அல்ட்ரா ஹை ரெசொலுசன் டிஸ்பிளேஸ் எக்ஸ்டெர்னல் கேமரா'க்களையும் தயார் செய்துள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனமும் அதன் ஆப்பிள் 'டிவி' பிளஸ் வீடியோக்களை இந்த ஹெட்செட்டுக்காக தயாரித்து வருகிறது.ஆப்பிளின் இந்த மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட், பயனர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் எனக் கூறப்படுகிறது.இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஹெட்செட்டின் விலை, 3 ஆயிரம் டாலர் அதாவது, 2.43 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !