இன்னொரு இயர்பட்ஸ்
பிரபல 'நாய்ஸ்' நிறுவனம், இந்தியாவில், புதிதாக ஒரு இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 'நாய்ஸ் ஏர் பட்ஸ் புரோ' எனும் பெயரில், இந்த 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' தொழில்நுட்பத்துடனும், 'டச் கன்ட்ரோல்' வசதியுடனும் வந்துள்ளது.தண்ணீர், வியர்வையால் பாதிக்கப் படாததற்கான 'ஐ.பி.எக்ஸ். 5' சான்றிதழும் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயர்பட்சிலும், தலா, இரண்டு மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன. ஐ.ஓ.எஸ்., மற்றும் ஆண்ட்ராய்டு என இருவகை போன்களிலும் பயன்படுத்தலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த இயர்பட்சை 20 மணி நேரம் பயன்படுத்தலாம்.அறிமுக விலை: 2,499 ரூபாய்.