உள்ளூர் செய்திகள்

பின்வாங்கிய அமேசான்

'அமேசான் பிரைம்' இதுவரை வழங்கி வந்த, மாதந்திரா சந்தா திட்டத்தையும், இலவச வெள்ளோட்ட திட்டத்தையும் வாபஸ் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பை அடுத்து, அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில், வங்கிகள் அனைத்து விதமான ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அம்சமான, ஏ.எப்.ஏ., வை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன்படி சந்தா, ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை வசூலிப்பதில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தன்னிச்சையாக பணத்தை எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடும். வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இத்தகைய காரணங்களால், அமேசான் பிரைம், தன்னுடைய மாதாந்திர சந்தா திட்டமான, 149 ரூபாய் திட்டத்தையும், ஓராண்டு சந்தா பெறுவதற்கான இலவச பரிசோதனை திட்டத்தையும் வாபஸ் பெற்றுள்ளது.இதனால், இனி மூன்று மாத சந்தா அல்லது, ஆண்டு சந்தா திட்டங்கள் மட்டுமே இருக்கும். மூன்று மாதத்துக்கு, 329 ரூபாய்; ஆண்டு திட்டத்துக்கு, 999 ரூபாயும் சந்தா தொகையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !