பாஸில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்
'பாஸில்' நிறுவனம் புதிதாக, 'பாஸில் ஜென் 6' ஸ்மார்ட்வாட்ச் வகைகளை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், பழைய 'வியர் ஓ.எஸ்., 2' மென்பொருளில் இயங்கும். அதேசமயம் 'வியர் ஓ.எஸ்., 3'ல் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.வியர் ஓ.எஸ். 3, 'கேலக்ஸி வாட்ச் 4' ரகங்களில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். இதன் அப்டேட் அடுத்த ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸில் ஜென் 6 ஸ்மார்ட்வாட்ச் 42 மி.மீ., மற்றும் 44 மி.மீ., டயல் அளவுகள் வந்துள்ளது. இவை 1 ஜி.பி., ரேம் மற்றும் 8ஜி.பி., சேமிப்பகம் கொண்டவையாகும். பாஸில் ஜென் 6 விலை, தோராயமாக 21,900 ரூபாய் ஆகிறது.