பெல்கின் சவுண்டுபார்ம் கனெக்ட்
அமெரிக்காவை சேர்ந்த 'பெல்கின்' நிறுவனம், புதிதாக 'பெல்கின் சவுண்டுபார்ம் கனெக்ட் ஏர்பிளே 2' எனும், டாங்கிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சவுண்டுபார்ம் கனெக்ட்டை பயன்படுத்தி, நம் வசம் இருக்கும் ஸ்பீக்கர்கள் வாயிலாக, ஐ.ஓ.எஸ்., சாதனங்கள் அல்லது மேக் கம்ப்யூட்டரிலிருந்து பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். இந்த டாங்கிலில், ஆப்டிக்கல் மற்றும் 3.5 எம்.எம்., அவுட்புட் உள்ளது.இந்த டாங்கில், ஆப்பிள் சாதனங்களிலிருந்து சிக்னலை பெற்று, எந்த ஒரு ரிசீவர் அல்லது ஸ்பீக்கருக்கும் மேற்சொன்ன அவுட்புட் வாயிலாக வழங்கும். கிட்டத்தட்ட 2015ல் வெளியான 'குரோம்காஸ்ட் ஆடியோ' போலவே இதுவும் செயலாற்றும்.அமெரிக்காவில் இதன் விலை, இந்திய மதிப்பில் 7,200 ரூபாய் ஆகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது தெரியவில்லை.