போட் ஏர்டோப்ஸ் 621
'போட்' நிறுவனம் அதன் புதிய, 'போட் ஏர்டோப்ஸ் 621' எனும் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போனின் சிறப்பு, 150 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் வந்திருப்பதாகும். இந்த இயர்போன், 2,600 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் வந்துள்ளது. இதனால் ஒரு கூடுதல் வசதியும் உள்ளது. இந்த இயர்போன் கேஸை, பவர் பேங்க் ஆகவும் நாம் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இவை தவிர, போட் சிக்னேச்சர் சவுண்டு, வி 5.0 புளுடூத் இணைப்பு, பாஸ் டிரைவர்ஸ், கூகுள் அசிஸ்டென்ட், ஆப்பிளின் சிரி ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. விலை: 2,999 ரூபாய்.