உள்ளூர் செய்திகள்

போஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ சாதனங்களுக்கு புகழ்பெற்ற 'போஸ்' நிறுவனத்தின், 'கொயட் கம்போர்ட் 45' ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. பலவிதங்களில் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு, இந்த ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேட்டரி, 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இருப்பினும், வடிவமைப்பை பொறுத்தவரை, முந்தைய மாடலை போலவே, இதுவும் பார்ப்பதற்கு இருக்கிறது.இந்த ஹெட்போனின் வலது பக்கத்தில், மொத்தம் 4 பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. இசையை கட்டுப்படுத்தவும், பிற சாதனங்களுடன் இணைக்கவும் இந்த பட்டன்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த போனில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் வகையிலும், வெளிப்புற சப்தங்கள் கேட்கும் வகையிலும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.விலை: 32,900 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !