உள்ளூர் செய்திகள்

வரப்போகுது: ஆண்ட்ராய்டு 12

கூகுள் நிறுவனம், 'ஆண்ட்ராய்டு 12' ஐ, விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்த அறிவிப்புகளை, கூகுள் படிப்படியாக வெளியிட உள்ளது. மைக்ரோபோனை எந்தெந்த செயலிகள் பயன்படுத்துகின்றன என்பது குறித்து காட்ட புதிய, 'ஐகான்', 'ஆண்ட்ராய்டு 12'ல் இடம்பெறும் என தெரிகிறது.'கான்வர்சேஷன்' எனும் புதிய, 'விட்கெட்ஸ்' இடம்பெறுகிறது. இது, தவறவிட்ட அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவற்றை தெரிவிக்கும். போன்களில் திரையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், ஒரு கையால் இயக்குவது என்பது சிரமமாகி வருகிறது. இந்த பிரச்னைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும்.அறிமுகம் செப்டம்பரில் இருக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !