உள்ளூர் செய்திகள்

வரப் போகுது: எல்.ஜி., டிவிகள்

எல்.ஜி., நிறுவனம், இந்த ஆண்டுக்கான, புதிய டிவி வகைகளை அறிமுகம் செய்து உள்ளது. 'ஒ.எல்.இ.டி., க்யூ என்.இ.டி., மினி எல்.இ.டி., நானோசெல் டிவி' என, பல்வேறு விதமான டிவி மாடல்களை, அறிமுகம் செய்திருக்கிறது.இந்த டிவிகள், 43 அங்குலத்தில் துவங்கி, 88 அங்குலம் வரை உள்ளன.இந்த டிவிகளின் சிறப்பம்சங்களில் ஒன்று, 'புளுடூத் சர்ரவுண்டு ரெடி' வசதி இருப்பது தான். இதன் மூலம், பல புளுடூத் ஸ்பீக்கர்களை ஒருங்கிணைத்து, விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, ஒரு ஸ்டேடி யத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை பெற முடியும். விற்பனை தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள் எதையும், எல்.ஜி., இன்னும் அறிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !