மி, ரெட்மி டிவிகளுக்கு போட்டி
உள்நாட்டு நிறுவனமான 'டைவா', இந்தியாவில் 'டைவா 4கே யு.எச்.டி., ஸ்மார்ட் டிவி' மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், 43 அங்குலம் மற்றும் 55 அங்குலம் ஆகிய அளவுகளில், டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.'டி 43 யு1 டபுள்.யு.ஓ.எஸ்., டிவி 43 அங்குலத்திலும்; டி 55 யு1 டபுள்யு.ஓ.எஸ்., டிவி 55 அங்குலத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்த ஸ்மார்ட் டிவிகள், எல்.ஜி., நிறுவனத்தின் வெப் ஓ.எஸ்., இயங்குதளத்தில் இயங்குகின்றன.'மி டிவி' மற்றும் 'ரெட்மி டிவி' ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த டிவிகள் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த டிவிகள், 20 வாட் சரவுண்டு சவுண்டு பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வந்துள்ளன. இவை 'டால்பி ஆடியோ சவுண்டு டெக்னாலஜி' உடன் வந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.விலை : 43 அங்குலம்: 34,999 ரூபாய்55 அங்குலம் : 49,999 ரூபாய்