அடடா ஆச்சரியம் - தங்கத்தால் ஆன பி.எஸ்., 5
ரஷ்யாவை சேர்ந்த, 'கேவியார்' பிராண்டு, அதன் விலைமதிப்பு மிக்க வடிவமைப்புகளுக்காக பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போது, 'சோனி பிளே ஸ்டேஷன் 5' சாதனத்தை, தங்கம் மற்றும் முதலை தோல் கொண்டு வடிவமைத்திருக்கிறது.இதற்காக, 20 கிலோ சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி உள்ளது. மொத்தத்தில், தங்கத்தையும் சேர்த்து, மிகுந்த விலை மதிப்பு கொண்ட, 30 கிலோ உலோகத்தால் இந்த பிளே ஸ்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளே ஸ்டேஷனின், கேம்பேட்ஸும் தங்கம் மற்றும் முதலை தோல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.விலை? சாதாரண பிளே ஸ்டேஷன் விலையே, கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் ஆகிறது. தங்கத்தால் ஆன பிளே ஸ்டேஷன் விலையை கேட்காமல் இருப்பதே நல்லது!