உள்ளூர் செய்திகள்

கூகுள் மேப்பில் டார்க் மோடு

கூகுள் நிறுவனம், அதன், 'மேப்' செயலியில், 'டார்க் மோடு' வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் கிடைக்கும் என, கூகுள் தெரிவித்துள்ளது. 'மேப்' செயலியில், முழுமையான, 'டார்க் மோடு' வசதியை வழங்குவதற்காக, கடந்த ஆண்டு செப்டம்பர் முதலே, பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவந்தது, கூகுள்.தற்போதைய காலகட்டத்தில், நாம் அனைவரும், திரையை பார்ப்பதால் சோர்வு அடைகிறோம்.கூகுளின், 'டார்க் மோடு', கண்களின் பிரச்னைக்கு ஒரு விடுதலையை வழங்குவதுடன்; நீண்ட பேட்டரி ஆயுளும் கிடைக்கும் என, கூகுள் தெரிவித்துள்ளது.இந்த 'டார்க் மோடை' நாம் பெறுவதற்கு, முதலில், 'கூகுள் மேப்'பை, 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு செட்டிங்ஸ், தீம் பகுதிக்கு சென்று, 'ஆல்வேஸ் டார்க் தீம்' என்பதை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !