உள்ளூர் செய்திகள்

டுவிட்டரிலும் எமோஜி

விரைவில் 'டுவிட்டர்' நிறுவனமும், 'எமோஜி' வசதியை இணைக்க இருக்கிறது. இந்த எமோஜிக்கள் பார்வைக்கு கிட்டத்தட்ட பேஸ்புக்கில் இருப்பது போன்று இருக்கும் என சொல்லப்படுகிறது. விருப்பம், பாராட்டு, சோகம், சிரிப்பு, யோசனை என பல எமோஜிகள் தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில, தயாரிப்பில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.ஆனால், கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலான எமொஜி டுவிட்டரில் இடம்பெறாது என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து செய்தி நிறுவனங்கள் டுவிட்டரிடம் கேட்டபோது, ''டுவிட்டரில் நடக்கும் உரையாடல்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை, விமர்சனங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான கூடுதல் வழிகள் குறித்து, நாங்கள் எப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அது குறித்த தகவல்களை, நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம்'' என்று மட்டும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !