உள்ளூர் செய்திகள்

நத்திங் நிறுவனத்தின் முதல் அறிமுகம்

'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த கார்ல் பை, அதிலிருந்து விலகி, 'நத்திங்' எனும், புதிய நிறுவனத்தை துவக்கியது, பலர் அறிந்த ஒன்று தான். லண்டனை அடிப்படையாக கொ ண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் முதல் அறிமுகம், ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில், இயர்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.'நத்திங்' நிறுவனம், முதலில் இயர்போன் சந்தையை கைப்பற்றுவது என்ற முடிவுடன் களம் இறங்கி இருக்கிறது. 'இயர் 1' எனும் பெயரில், தன்னுடைய முதல் தயாரிப்பான இயர்போனை, ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் அதே நாளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இதுகுறித்து பேசிய கார்ல் பை, “இயர்போன் சந்தை வித்தியாசமான இயர்போன்களுக்காக காத்திருக்கிறது. நாங்கள் அந்த சந்தையில் எங்களை நிலைநிறுத்த முயற்சி செய்கிறோம்” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !