உள்ளூர் செய்திகள்

கேலக்ஸி நோட் 20 டெலிவரி

'சாம்சங் கேலக்ஸி நோட் 20' போன்களை முன்பதிவு செய்தவர்களுக்கு இம்மாதம், 25ம் தேதியிலிருந்து டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பதிவு செய்யாதவர்கள், 28ம் தேதியிலிருந்து,'கேலக்ஸி நோட் 20' மற்றும் 'கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா' ஆகிய போன்களை வாங்கலாம். 'கேலக்ஸி நோட் 20' மற்றும், 'அல்ட்ரா' போன்களுக்கான முன்பதிவு இதுவரை, 5 லட்சத்தை தாண்டிவிட்டது.'கேலக்ஸி நோட் 20' போனில், 4ஜி மற்றும் 5ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதும், இந்தியாவில், 4ஜி மாடலை மட்டுமே விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. இருப்பினும், 'கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா', 5ஜி சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும். 'சாம்சங் கேலக்ஸி நோட் 20' போனின் விலை, 77,999 ரூபாய் ஆகிறது. 'அல்ட்ரா 5ஜி' 1,04,99 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !