கேலக்ஸி இசட் போல்டு 3
சாம்சங் நிறுவனத்தின், 'கேலக்ஸி இசட் போல்டு 3' ஸ்மார்ட்போன், ஜூலை மாதத்திலேயே அறிமுகமாகக்கூடும் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் படங்கள் அண்மையில், 'டுவிட்டர்' வாயிலாக வெளியே கசிந்துள்ளது.இப்படி கசிந்த படங்களின் மூலம், இந்த போல்டபிள் போன், 'அண்டர் டிஸ்பிளே' கேமரா கொண்ட போனாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கறுப்பு, அடர் பச்சை மற்றும் வெள்ளி என, மூன்று வண்ணங்களில் தயாராகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஜூலையில் அறிமுகம் ஆகும் என தெரியவந்தாலும், எந்த தேதி என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.