உள்ளூர் செய்திகள்

வரப் போகுது

'கேலக்ஸி ஏ 32 5ஜி'சாம்சங் புதிதாக அதன் கேலக்ஸி வரிசையில், 'சாம்சங் கேலக்ஸி ஏ 32 5ஜி' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், 4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி., என மூன்று விதமான ரேம் மற்றும், 32, 64,128 ஜி.பி., சேமிப்பகங்களுடன், நான்கு வண்ணங்களில் வந்துள்ளது.இந்த ஸ்மார்ட்போன், 6.5 அங்குல திரையுடனும், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடனும் வந்துள்ளது. இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.விலை: 24,800 - 26,600 ரூபாய்.'கேலக்ஸி பட்ஸ் புரோ' சாம்சங் நிறுவனம், அண்மையில், புதிதாக 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'கேலக்ஸி பட்ஸ் புரோ' எனும் இந்த, 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்', 'இன்டலிஜெண்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் வந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இயர்போன்களில் இது மிகவும் அட்வான்ஸ்டு மாடல் ஆகும்.இந்த இயர்போன், துவக்கத்தில் சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் எப்போது வருகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில் உள்ள, 'இண்டலிஜெண்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்', நாம் ஏதாவது பேசுகிறோம் என்றால் அதை உணர்ந்து அதுவாகவே இசையின் சப்தத்தை குறைத்துவிடும். இதன் விலை, இந்தியாவில், 20 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தாம்சன் டிவிதாம்சன் நிறுவனம், இந்தியாவில், புதிதாக இரண்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவிகள், குடியரசு தினத்தன்று விற்பனைக்கு வருகின்றன. 'ஆண்ட்ராய்டு 9' இயங்கு தளத்தில் செயல்படும் இந்த, 'பாத்' மாடல் டிவிகள், 42 மற்றும் 43 அங்குல அளவுகளில் வர உள்ளன.இந்த டிவிகளில், கூகுள் அசிஸ்டென்ட் வசதி, அமேசான் பிரைம், யு டியூப், சோனி லைவ் ஆகியவற்றுக்கான பிரத்யேகமான பட்டன் வசதிகளுடன் கூடிய ரிமோட், மூன்று எச்.டி.எம்.ஐ. போர்ட்டுகள், இரண்டு யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள் ஆகியவை உள்ளன. மேலும், 43 அங்குல டிவியில், 40 வாட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.தாம்சன் 42 அங்குல டிவியின் விலை, 19,999 ரூபாய். 43 அங்குல மாடலின் விலை, 22,499 ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !